Friday, September 24, 2010

Everland Amusement Park, Yongin City, South Korea.

நாங்கள் எவர்லாந்து சென்ற அனுபவத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன். அதற்க்கு முன் சில புகைப்படங்கள்.. உங்களுக்காக..













Monday, September 20, 2010

சுசொக் (ChuSeok) - தென் கொரியா அறுவடை திருநாள்

நம்மூர் பொங்கல் போல தென் கொரியாவில் அறுவடை திருநாள் கொண்டாடுகிறார்கள். செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் இந்த விழா வெகு விமர்சையாக கொண்டடபடுகிறது. தென் கொரியாவில் வருடத்தில் மூன்று நாட்கள் விடுமுறை என்றால் சொல்லவா வேண்டும். ஜனவரி மூன்றாம் வாரத்தில் வரும் சீன புத்தாண்டு மற்றும் இந்த சுசொக் விழா, இரண்டிற்கும் மட்டும் தான் மூன்று நாட்கள் விடுமுறை. அதுவும் வருடதில் இரண்டு முறை என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. 

இன்று முதல் மக்கள் சுசொக் திருநாளை  கொண்டாட ஆயத்தம் ஆகிவிட்டார்கள். அனைவரும் தங்கள் கிராமங்களுக்கு சென்று முதாதையரை வழிபடுவர். பின் குடும்பத்துடன் மது அருந்துவர். இதில் சிறப்பு என்ன வென்றால், இந்த மூன்று நாளும் தங்களின் கவலைகளை மறந்து மிகவும் சந்தோசமாக இருப்பார்கள். 

தென் கொரிய மக்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை மேற்கொண்டாலும் சில விஷயங்களில் அவர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை விட்டு கொடுக்க மறுகின்றனர். 

சுசொக் நாளன்று வித விதமான உணவு வகைகளை சமைப்பார்கள். ரைஸ் கேக் (பல வடிவங்களில், பல  சுவைகளில்) மற்றும் மாட்டு இறைச்சியில் செய்த உணவு வகைகள் தான் முக்கியவை. இதனுடன் அனைத்து பழங்களையும் வைத்து படைப்பர். இதற்க்கு "ஜெசசங் (Jesasang)" என்று பெயர். நம்மூர் வேஷ்டி, சேலை போல கொரியன் மக்கள் "ஹன்போக்" உடுத்துவார்கள். அதுவும் பல வண்ணங்களில். எங்கு பார்த்தாலும் மிகவும் அழகாக இருக்கும். அதுவும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உடுத்தி இருப்பதை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கொள்ளை அழகு...


ஈட்டி எறிதல், மல்யுத்தம், கோழி சண்டை, மாட்டு சண்டை மற்றும் இன்னும் சில விளையாட்டுகள் சுசொக் தினத்தன்று பிரசித்தி பெற்றவை. 

தென் கொரியாவில் வாழும் வெளிநாட்டவர்க்கு பெரிய சந்தோசம் என்னவென்றால், சுசொக் தினங்களில் பல இடங்களை சுற்றி பார்க்க அனுமதி இலவசம். சில இடங்களில் 50% மட்டும் வசூலிக்கப்படும். 

மற்ற நாடுகளின் அறுவடை திருநாள்
Crop Over : Barbados
Niiname-sai, Shinjo-sai : Japan
Dożynki : Poland
Fiesta Nacional de la Vendimia :  Argentina
Erntedank : Germany & Austria
Guldize : United Kingdom
Harvest festival : United Kingdom
Mhellia: Isle of Man
Mehregan : Iran, Ancient Persia
Mid-Autumn Festival : China, Vietnam
Pongal : TamilNadu, India
Annual Harvest Festival of Prosser : Washington
Solung :  Arunachal Pradesh
Sukkot : Jewish harvest festival 
Timoleague :  Irish
Ikore :  Nigeria
Khuado Pawi :  Chin tribe of India and Burma
Duneland Harvest Festival : Porter, Indiana, Chicago
Thanksgiving : United States , Canada
Flores de Mayo : Flower festival in the Philippines
Gawai Dayak : Malaysia
Kadayawan : Philippines
Maras Taun : Belitung in Indonesia
Pahiyas Rice festival in the Philippines
"Khuado pawi" Harvest festival of Zomi in Chin state , Myanmar 

 
South Asia
Vishu is an agricultural festival of the Malayalee Nairs of Palakkad in Kerala, India.
Kanyarkali is an agricultural festival of the Malayalee Nairs of Chittur and Alathur thaluks of Palakkad in Kerala, India.
Bhogali Bihu: (or Magh Bihu) is a harvest festival celebrated in Assam which marks the end of harvesting season in mid-January.
Lohri: celebrated in North India esp. Punjab
Vasant Panchami: celebrated in West India esp. Gujarat, This festival is celebrated in Nepal, West Bengal (India) and Bangladesh to invoke wisdom and consciousness in human beings.
Akhatrij (Akshaya Tritiya): celebrated in West India esp. Gujarat, Maharashtra, Madhya Pradesh, Rajasthan, Goa and Konkan regions
holi: celebrated in North-West India especially Rajasthan and Gujarat.
Nabanna : West Bengal (India) and Bangladesh
Onam : Kerala, India
Deepoli Parba:  Karnataka, India
Pongal : celebrated by the Tamil people in Tamil Nadu (India) and other places
Sankranthi : Gujarat, Karnataka, Andhra Pradesh, Maharashtra, Madhya Pradesh and Uttar Pradesh, India
Vaisakhi :  Punjab, India